மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது CBSE 2025 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறு சரிபார்ப்புக்கான தேதி..!!

0
????????? ???????????.. ????????? CBSE 2025 ?????????? ????????????, ??? ???????????????? ????..!!
மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது CBSE 2025 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறு சரிபார்ப்புக்கான தேதி..!!

மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது CBSE 2025 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறு சரிபார்ப்புக்கான தேதி..!!

இந்தியாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தேர்வானது பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு CBSE தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 42 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் மே 13 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதை தொடர்ந்து, CBSE தேர்வு முடிவுகளுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்புக்கான விண்ணப்ப தேதிகளை அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் வெளியிட்டுள்ளது.

TNPSC 2025 – Group 4 தமிழ் தகுதித்தேர்வு., இந்த ஒரு வீடியோ போதும்., விவரம் உள்ளே!!

மேலும், மதிப்பெண்களில் அதிருப்தி அடைந்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது மறுகூட்டல் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளின் நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். “இந்த விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 27, 2025 – ஜூன் 7, 2025 வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 21, 2025 – ஜூன் 3, 2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது”. இந்த செயல்முறையை மேற்கொள்ள “results.cbse.nic.in” இணையத்தளத்தில் “சமீபத்திய செய்திகள்” விருப்பம் மூலம், “பதில் புத்தகம்” அல்லது “மறுமதிப்பீடு”ஆப்ஷன் தேர்வு செய்து பாடத்திற்கான செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த செயலாக்கக் கட்டணங்கள் திரும்ப வழங்கப்படாது என்றும், இந்த செயல்முறையானது ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!