கொரோனா போய் குரங்கு வந்திருச்சு..! சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை ..!
குரங்கம்மை எனப்படும் ” எம்பாக்ஸ் ” நோய்த்தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இத்தகைய நோய் அங்குள்ள மக்களை அதிகமாக பாதித்து வருவதால், மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், தற்போது, இந்தியாவில் ஒரு நபருக்கு குரங்கம்மை நோய் தொற்று இன்று உறுதிசெய்யபட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. மேலும், இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளை (செப்.11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!


























