வேளாண் படிப்புகளில் சேர இனி நுழைவுத் தேர்வு – 20% இடங்கள் ஒதுக்கீடு! முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இனி நுழைவுத் தேர்வு கட்டாயமாகும் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுவரை 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கை பெற்றிருந்த நிலையில், இப்போது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் சேர்க்கை வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் திறனையும், அறிவுத் திறனையும் மதிப்பீடு செய்ய முடியும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சிகள் – ‘வேலைவாய்ப்பு தயார், வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் மெகா வாய்ப்பு!
மேலும், மொத்த சேர்க்கை இடங்களில் 20 சதவீதம் இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வைக்கப்பட உள்ளன. வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கான வாய்ப்புகள் இதில் முன்னுரிமை பெறும். விரைவில் நுழைவுத் தேர்வு தேதிகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


























