பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சிகள் – ‘வேலைவாய்ப்பு தயார், வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் மெகா வாய்ப்பு!
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் “வேலைவாய்ப்பு தயார், வெற்றி நிச்சயம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக தொழில்துறை அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மென்பொருள், வங்கி, விற்பனை, கணக்கியல் மற்றும் அலுவலக மேலாண்மை போன்ற பல துறைகளில் தொழில் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் விருப்பத்துறைக்கு ஏற்ப ஆன்லைனில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனைப் பெறலாம்.
ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை – யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பிற்கான தயாரிப்பு, நேர்முகத் தேர்வு நுட்பங்கள், ரெஸ்யூம் தயாரித்தல் மற்றும் தொழில் தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அனைத்து பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன், சிறப்பாக தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு நிறுவனங்களுடன் நேரடி வேலை வாய்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் பட்டதாரிகள், அரசின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தின் நேரடி லிங்க் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம்.


























