பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமையிலானார். பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் சுவாமி காலேசானந்தா கல்வி நிறுவனத்தின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
கிராமப்புற கல்வி நிறுவனங்களை பாதிக்காமல் சட்டம் சுயநிதி கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தல்
பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் சுவாமி சர்வோத்மானந்தா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். மேலும், உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் பொதுச் செயலாளர் சுவாமி சுவீரானந்தா காணொளி வழியாக ஆசியுரை வழங்கினார். இந்த விழாவில் மாற்றுத்திறன் மேலாண்மை, சிறப்பு கல்வியியல், வேளாண்மை, ஊரக மேம்பாடு, கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் உடற்கல்வியியல் புலங்களில் மொத்தம் 318 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழா நிறைவில் உடற்கல்வியியல் புல முதன்மை கிரிதரன் நன்றி தெரிவித்தார்.


























