நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் 33 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
நாடு முழுவதும் தற்போது சுமார் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இயங்கிவருகின்றன என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் மொத்தம் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பெரும்பாலும் இவை கிராமப்புற மற்றும் தொலைதூர மலைப்பகுதிகளில் உள்ளன. ஒரு ஆசிரியர் மட்டுமே அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தும் நிலையில், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களின் அடிப்படை கல்வித் திறன் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு “ஒரு பள்ளிக்குக் குறைந்தது இரண்டு ஆசிரியர்கள்” என்ற திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் தட்டுப்பாடு தீர்க்க, மாநில அரசுகளுடன் இணைந்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் கற்றல் கருவிகள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் மாணவர்களுக்கு தரமான அடிப்படை கல்வி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


























