பி.டெக் படிப்பிற்கு பிறகான வேலைவாய்ப்புகள் என்னென்ன…? – தெரிந்து கொள்ளுங்கள்!
இன்றைய இளம் தலைமுறையில் பலர் பி.டெக் (B.Tech) எனப்படும் பொறியியல் பட்டப்படிப்பை தேர்வு செய்கின்றனர். ஆனால் படிப்பு முடிந்த பிறகு எந்த துறையில் வேலை பெறலாம் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. பி.டெக் பட்டதாரிகளுக்கு மென்பொருள் நிறுவனங்கள், அரசு பொது துறை நிறுவனங்கள் (PSU), உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் போன்றவற்றில் அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், மற்றும் கேமிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு பெரிய நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களை திறந்து விடுகின்றன.
சென்னை திருவொற்றியூரில் உள்ள கோவிலில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?
அதே சமயம், பி.டெக் முடித்த மாணவர்கள் UPSC, TNPSC, GATE, DRDO, ISRO போன்ற அரசு தேர்வுகளுக்கும் தயாராகலாம். மேலும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு Data Science, Artificial Intelligence, Cyber Security போன்ற துறைகளில் மேற்படிப்புகள் செய்து உயர் ஊதிய வேலைகளையும் பெறலாம். தன்னிச்சையாக ஸ்டார்ட்-அப் தொடங்க விரும்பும் மாணவர்களுக்கும் பி.டெக் ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும். எனவே, பி.டெக் முடித்த பிறகு திறமையைப் பொறுத்து பல வாய்ப்புகள் திறந்திருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


























