
திருமங்கலம் மைக்குடி பள்ளியில் மாணவர்கள் தயாரித்த நீர் பாதுகாப்பு செயல் திட்டம் அறிவியல் விழிப்புணர்வுக்கு புதிய முனைவு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க நீரை பற்றிய செயல் திட்டம் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மாணவர்கள் தங்கள் சமூகத்திற்கான நீர் பாதுகாப்பு முயற்சிகளை வடிவமைத்து, நீரின் பயன்பாடு மற்றும் சுத்திகரிப்பு குறித்து ஆராய்ந்தனர்.
நிகழ்வில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் ராஜன், மாநில வானவில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மற்றும் மதுரை மாவட்ட துளிர் அறிவியல் இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர். பேராசிரியர் ராஜன் நீரை பரிசோதித்து அதன் தன்மை குறித்து மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளித்தார். நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தது பள்ளி ஆசிரியை தாமரைச்செல்வி ஆவார்.

























