‘டிஜி லாக்கரில்’ தான் இனி ‘மைக்ரேஷன் சர்டிபிகேட்’ – மாணவர்களுக்கு புதிய வசதி!

0

மாணவர்கள் இனி கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் மாற்றம் செய்யும் போது ‘மைக்ரேஷன் சர்டிபிகேட்’ பெற அலுவலகங்களுக்கு நேரில் செல்ல தேவையில்லை. கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த சான்றிதழ் இனி டிஜி லாக்கர் (DigiLocker) வழியாகவே ஆன்லைனில் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து, பிற கல்வி நிறுவனங்களுக்கு உடனே சமர்ப்பிக்க முடியும். இந்த நடைமுறை, ஆவண இழப்பு மற்றும் போலி சான்றிதழ் பிரச்சனைகளை தடுக்க உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

’25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலை அமைக்கலாம்’ – உயர்கல்வித் துறை புதிய வழிகாட்டுதல்

டிஜி லாக்கர் வழியாக சான்றிதழ்களை வழங்கும் புதிய நடைமுறை தற்போது தேசிய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி டிஜி லாக்கர் கணக்கில் உள்நுழைந்து ‘மைக்ரேஷன் சர்டிபிகேட்’யை பதிவிறக்கம் செய்யலாம். இந்நிலையில், டிஜிட்டல் கல்வி சேவைகளை ஊக்குவிக்கும் வகையில், இது மாணவர்களுக்கு நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும் முக்கிய மாற்றமாக கல்வி வட்டாரங்கள் பாராட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!