உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. பிரக்ஞானந்தா போராடி தோல்வி!
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.
இறுதி சுற்று:
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டைபிரேக்கர் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் போட்டி போட்டு விளையாடி வந்தனர். முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இறுதிப்போட்டியின் சுற்றுகள் டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இன்று (ஆக.24) டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ் – ஊக்கத்தொகை வழங்க உத்தரவு.. அரசாணை வெளியீடு!
பரபரப்பாக நடந்த இறுதி சுற்றின் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தாவை ஜெயித்து மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த போட்டியில் பிரக்ஞானந்தாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார். இருந்த போதிலும் 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்தியர் நுழைந்து இருப்பது பெருமையான விஷயம் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.