மீண்டும் பேருந்து கட்டணம் உயருமா….? – தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்த அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிக்கையில், தமிழக அரசு செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார். அந்த அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல விஷயங்களில் மக்களை ஏமாற்றி வருகிறது. உதாரணமாக வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார வரி போன்ற வரிகளை உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்துள்ளது என்று கூறியிருந்தார். மேலும், பேருந்து கட்டணம் உயர்த்துவதற்கு தனி ஆணையம் அமைப்பதாக செய்தி வெளியாகி இருந்தது, இந்த செய்தி உண்மையாக இருந்தால் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு!!
ஏனென்றால், இன்று இருக்கும் அனைத்து அரசு பேருந்துகளும் சரியான நிலையில் இல்லை. அவை அனைத்தும் கதவுகள் இல்லாமலும், கண்ணாடிகள் நொறுங்கியும், மேற்கூரை தொங்கிய நிலையிலும் உள்ளது. மேலும், டிரைவர் சீட்டில் இருந்து எப்பொழுது கீழே விழுவார் என்று கூட தெரியவில்லை. இப்படி பாதுகாப்பு இல்லாமல் பேருந்துகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் எப்படி பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

























