
வாட்ஸ்அப்-பில் மேம்படுத்தப்பட்ட மாற்றம்.. புதிய அம்சங்களை வெளியிட்டு மக்களை வியக்கவைத்த மெட்டா நிறுவனம்..
இந்தியாவில் மட்டும் 487.5 மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றன. மேலும், வாட்ஸ்அப்-பின் மூலம் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் லொகேஷன் போன்ற தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் தற்போது வெளியிட்ட புதிய அம்சங்களை பற்றி காண்போம்.
அதாவது வாட்ஸ்அப் தற்போது டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான புதிய அழைப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தில் வாட்ஸ்அப் குழுவை பயன்படுத்தும் போது பிறர் உதவியின்றி நீங்கள் யாரை அழைக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை அளிக்கிறது. மேலும், உங்கள் வீடியோ அழைப்புகளை இன்னும் சுவாரசியமாக வைத்திருக்க கூடுதல் “பில்டர்களை” சேர்த்துள்ளது. இதை தொடர்ந்து டெஸ்க்டாப் பயன்பாட்டில் அழைப்பை எவரேனும் இடைநிறுத்தம் செய்து விட்டால் மீண்டும் இணைப்பின் அனைத்து தகவல்களையும் விரைவாகக் அணுகலாம். மேலும், மேம்படுத்தப்பட்ட வீடியோ குவாலிட்டி மூலம் 1-1 அல்லது குழு உரையாடல்களை சிறந்த முறையில் அனுபவிக்கலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட வசதிகளை டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனம் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தி அழைப்புகள் மேற்கொள்ளலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


























