WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நவ.1 முதல் ‘இந்த’ போன்களில் சேவை நிறுத்தம்!

0
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு - நவ.1 முதல் 'இந்த' போன்களில் சேவை நிறுத்தம்!
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு - நவ.1 முதல் 'இந்த' போன்களில் சேவை நிறுத்தம்!
WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – நவ.1 முதல் ‘இந்த’ போன்களில் சேவை நிறுத்தம்!

நவம்பர் 1ம் தேதி முதல் பழைய ஆண்ட்ராய்டு பதிப்பு 4.0.4 பயன்படுத்தும் மொபைல் போன்களில் WhatsApp செயலி பயன்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த செயலி நிறுத்தப்படும் மொபைல் போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp சேவை நிறுத்தம்:

உலகம் முழுவதும் அதிகளவு பயனர்களை கொண்டு இயங்கி வரும் நிறுவனம் WhatsApp. WhatsApp மூலம் நாம் கருத்துக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் பரிமாறி வருகின்றோம். இதனால் WhatsApp ஒரு தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ளது. அடிக்கடி அப்டேட்கள் வழங்கி வருவதால் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதாலும் அனைவரின் மொபைல் போனிலும் WhatsApp நீங்கா இடம் பிடித்துள்ளது.

உங்களது ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? அதனை தடுக்கும் எளிய வழிமுறைகள்!

தற்போது WhatsApp நிறுவன பயனர்களுக்கு பல்வேறு அப்டேட் வழங்கி வருகிறது. ஆனால் ஆண்ட்ராய்டு பழைய மொபைல் போனில் இந்த அப்டேட்கள் செயல்படுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. எனவே பயனர்களின் மொபைல் போன் பழைய ஆண்ட்ராய்டு பதிப்பு 4.0.4 ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களின் மொபைல் போனில் நவம்பர் 1ம் தேதி முதல் WhatsApp செயலி இயங்காது என கூறப்பட்டது.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல்கள்:
  • Samsung Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy SII, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core, மற்றும் Galaxy Ace 2
  • LGs Lucid 2, LG Optimus F7, LG Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD, 4X HD, Optimus F3Q
  • TE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 மற்றும் ZTE Grand Memo
  • Huawei Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL, Ascend P1 S மற்றும் Ascend D2

சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோ எல் மற்றும் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்

இந்த நிலையில் WhatsApp நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இனி வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 4.0.4 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் பயன்படுத்தும் மாடல்களிலும், ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான ஐஓஎஸ் பயன்படுத்தும் போன்களில் இனி WhatsApp பயன்படுத்த முடியாது. iPhone 6S, iPhone 6S Plus, Apple iPhone SE 1 ஆகிய மொபைல்களிலும் நவம்பர் 1ம் தேதி முதல் WhatsApp செயலி இயங்காது என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!