தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வானிலை அறிக்கையின் படி நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரியில் இடைவிடாது மழை தொடர்கிறது. அம்மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போல நடுவட்டம் பகுதியில் தலா 60 மி.மீ, உதகையில் 35 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழை மற்றும் கற்றால் உதகையில் காற்றின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை பணியாக மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்த தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. அதனால் முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக அணைத்து மாவட்டங்களிலும் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்றைய வானிலை அறிக்கையின் படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.