தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய / மாநில அரசுகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அன்றைய தினம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கிராம சபை கூட்டம்:

ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதாவது ஜனவரி 26, குடியரசு தினம் அன்றும், மே 1 தொழிலாளர் தினம் அன்றும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்றும், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் அன்றும், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் என 6 சிறந்த நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது .

TN Job “FB  Group” Join Now

அவ்விதமாக வருகிற திங்கட்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ந் தேதி காலை 11 மணியளவில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!

மேலும், கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவை நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், இதை குறித்ததான மொத்த அறிக்கையையும் வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர்களுக்கும் சுற்றறிக்கையை அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!