TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ஜாக்பாட் அறிவிப்பு!
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - ஜாக்பாட் அறிவிப்பு!
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் 30% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!

TCS, Infosys, Wipro & HCL போன்ற ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்டி வருகின்றன. இதனால், இந்தாண்டில் கூடுதலாக 30% ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

TCS, Infosys, Wipro & HCL வேலைவாய்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், Wipro மற்றும் HCL போன்ற நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே நல்ல வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் புதிதாக ஊழியர்களை பணியில் அமர்த்தியபடியே இருந்து வருகின்றன. இந்நிலையில், மேலும் 30% ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி இது குறித்து பேசியுள்ளார். அதாவது, திறமைகளின் மூலமாக நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும், நிறுவனங்களில் தேய்மான அளவை குறைக்கவும், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை ஈட்டவும் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்துவதாக தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 28.4 சதவிகித ஊழியர்கள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அதே போல விப்ரோ நிறுவனமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாக ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர்.

மாணவ, மாணவியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – ஒடிசா பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

அதாவது, விப்ரோ நிறுவனத்தின் மார்ஜினை மேம்படுத்தவே புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜதின் தலா தெரிவித்துள்ளார். தற்போது விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் எதிர்பார்த்ததை விட 15 சதவீதம் குறைவாக உள்ளது. இதனை நிலைநாட்டுவதே விப்ரோ நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும், விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 17.9 சதவீதம் அதிகரிக்கிறது. இந்தாண்டு விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 2.7 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அதே போல HCL நிறுவனத்திற்கும் ஆண்டு வருவாய் $3 பில்லியனாக இருக்கிறது. மேலும், TCS நிறுவனத்தின் ஆண்டு வருவாய் $6.78 பில்லியன் டாலர்களாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!