மாணவ, மாணவியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – ஒடிசா பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

0
மாணவ, மாணவியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - ஒடிசா பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!
மாணவ, மாணவியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - ஒடிசா பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!
மாணவ, மாணவியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – ஒடிசா பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

மாணவ, மாணவியர்களிடையே நிலவும் பாலின வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக ஒடிசா பள்ளிக்கல்வித்துறை பாலின சமத்துவ பாடத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு விரிவாக தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இந்தியாவில் அதிகமாக பாலின வேறுபாடுகள் நிலவுவதால் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் நடைபெற காரணமாக அமைகிறது. இதனால், பள்ளியில் இருந்தே மாணவர்களின் மனதில் பாலின ஒற்றுமையை விதைக்க வேண்டும் என அரசு முயற்சித்து வருகிறது. இதனால், நாட்டில் நிலவும் பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாணவர்களின் மனப்பான்மை மற்றும் நடத்தையை மாற்றியமைப்பதற்காக பாலின சமத்துவப் பாடத்திட்டத்தை ஒடிசா அரசு துவங்கியிருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, இந்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக ஒடிசா மாநிலத்தில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் 5,000 மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பாலின சமத்துவப் பாடத்திட்டத்தை இணைக்கவுள்ளனர். இதன் மூலமாக மாணவர்களிடையே பாலின மனப்பான்மை குறித்தான முற்போக்கு சிந்தனை கண்டிப்பாக மாறும் என தெற்கு ஆசியாவின் நிர்வாக இயக்குனர் ஷோபினி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – பட்டியலில் பெயர் இருக்கிறதா? முழு விவரங்கள்!

மேலும், இந்த பாலின சமத்துவக்கல்வி திட்டத்தின் மூலமாக மாணவர்களிடையே பாலின சமத்துவத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் பாலின சமத்துவத்தின் நிலையான வளர்ச்சி இலக்கு ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ மாணவியர்களிடையே பாலின – சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் பள்ளியில் ஒரு பகுதியாக நடைபெறும் என பள்ளிக் கல்விச் செயலர் துறை முதன்மைச் செயலாளர் பிஷ்னுபாதா சேதி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here