தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
மின்சாரம் என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தின் தேவையின்றி எந்த ஒரு வேலையும் செயல்பட முடியாது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளை விட மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருவதால் அதற்காக அதிக அளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தவிர விவசாயத்திலும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்தும் மின் இணைப்பின் மூலம் நடைபெறுகிறது. குறிப்பாக ரயில்வே துறையில் மின்சார ரயில்கள் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் சோலார் முறை மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய சக்தி மூலமும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மின்மாற்றி கட்டமைப்பு மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டூவிபுரம் 3ஆவது தெரு முதல் 6 வது தெரு வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் அறிவித்துள்ளார்.