அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!

இந்திய நாட்டு மக்களின் வசதிக்காக, அரசு இலவச ரேஷன் திட்டத்துக்கான காலத்தை செப்டம்பர் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்கள் மீதான மோசடிகள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை அரசு வெளியிடப்பட்டுள்ளது.

மோசடியில் இருந்து பொருட்களை பாதுகாப்பது எப்படி:

கொரோனா காலகட்டத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில், முதன் முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதல் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் பல்வேறு காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மக்களின் இயல்வு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி பயனாளிகள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். தற்போது கொரோனா தாக்கம் அனைத்து மாநிலங்களும் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வார இறுதி நாட்கள் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

இருப்பினும் PMGKAY திட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக பலவேறு குற்றசாட்டுகள் எழுந்து உள்ளது. நீட்டிக்கப்பட்டு உள்ள இலவச ரேஷன் திட்டத்தில் கூட FPS டீலர்கள் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் கருவி மூலம் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாட்டில் உள்ள பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் கருவிகளை எலக்ட்ரானிக் தராசுகளுடன் இணைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ரேஷன் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் டீலர் இரண்டு e-POS சாதனங்களை பயன்படுத்துகிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் இரண்டு இ-பிஓஎஸ் சாதனங்களை பயன்படுத்துவது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த சாதனங்களை வைத்து தான் பல மோசடிகள் நடைபெறுகிறது. உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் உசேன், ஒரு ரேஷன் கடையில், FPS டீலர் ஒதுக்கிய ஒரு e-POS கருவிக்குப் பதிலாக இரண்டு e-POS கருவிகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். எனவே ரேஷன் டீலர் யாராவது இரண்டு e-POS கருவியைப் பயன்படுத்தினால், அதை உடனடியாக உறுதி செய்து அதைப் பற்றி புகார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!