‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த விஜே தீபிகா அதே சீரியலை விட்டு விலகிய பின்னர் தனது கவனத்தை யூடியூப் பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில் மாடுகளுக்கு பால் கறப்பது போல அவர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

விஜே தீபிகா

இன்றைய கால கட்டத்தில் சினிமா அல்லது சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் ஆர்வம் மிக்கவர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகள், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கும் புகைப்படங்கள், கலாட்டா வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அதிலும் ரீசன்ட் டைமில் சின்னத்திரை பிரபலங்கள் நடத்தி வரும் யூடியூப் சேனல் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு சுகப்பிரசவம் – தாயும், சேயும் நலமாக இருப்பதாக பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

குறிப்பாக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை, குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்கள் வழியாக பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஜே தீபிகாவும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலை துவங்கி இருக்கிறார். அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரம் மூலம் மக்களின் மனம் கவர்ந்த தீபிகா இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

திருமணத்தில் கண்கலங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி – வைரலாகும் புகைப்படங்கள்!

இதையடுத்து தனக்கென தனியாக ஒரு யூட்யூப் சேனலை துவங்கி இருக்கும் விஜே தீபிகா வித்தியாசமான பல வீடியோக்களை அதில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடுகளுக்கு பால் கறக்கும் வண்ணமாக எடுத்துள்ள வீடியோ ஒன்றை, வந்தேன்டா பால்காரி என்ற கேப்ஷனுடன் தனது யூட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார் தீபிகா. இதுவரை சினிமா பிரபலங்கள் எவரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்திருக்கும் விஜே தீபிகாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!