சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம்! முழு விபரம் இதோ!

0
சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம்! முழு விபரம் இதோ!
சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம்! முழு விபரம் இதோ!
சொந்த வீடு கட்ட ஆசையா? மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம்! முழு விபரம் இதோ!

இந்தியாவில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா:

சொந்த வீடு இன்று வரை பலரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. மாதாந்திர தவணையில் வங்கிகள் மூலம் வீட்டு கடன் பெற்று வீட்டை கட்டுவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் இந்த வீட்டு கடன் தகுதி, மற்றும் வருமானம் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. அதனால் நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையில் மத்திய அரசு நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்த வீடு என்பது அனைவருக்கும் சாத்தியமாகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பட்டியல் தயாரிக்க உத்தரவு!

சேதமடைந்த வீடுகளில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வசிப்பவர்களுக்கு 25 சதுர மீட்டர் அளவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீடு வழங்கபடுகிறது. யோஜனா திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பங்கள், சொந்த நிலமற்ற குடும்பங்கள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்கள், பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியறிவு இல்லாத குடும்பங்கள், சிறுபான்மையினர் போன்றோர்கள் கடனுடதவி பெறலாம். இந்த திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து 3% வட்டியில் மானியத்துடன் ரூ.70,000 முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரை பெறலாம். மாதாந்திர தவணை தொகையாக 38,359 ரூபாய் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • இத்திட்டத்தில் சேர முதலில் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் எண் MGNREGA-பதிவு செய்யப்பட்ட வேலை அட்டை ஆகிய ஆவணங்கள் தேவை.
  • தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்து கொண்டி https://pmaymis.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கக் வேண்டும். இல்லையெனில் பொதுச் சேவை மையங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று ஜிஎஸ்டி மற்றும் ரூ.25 கொடுத்து சமர்பிக்கலாம்.
  • இதில் பெண் விண்ணப்பதாரர் என்றால் முன்னுரிமை அளிக்கப்படும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு கிராம சபை அதிகாரிகளால் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!