VIT – Columbia University இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தம் | 4+1 திட்டம்

0

கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இரட்டை பட்டப்படிப்பு – VIT வரலாற்றுச் சாதனை

இந்தியாவில் முதன்முறையாக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (VIT), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் Columbia Engineering உடன் இரட்டை பட்டப்படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

4+1 இரட்டை பட்டப்படிப்பு

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகுதியுள்ள VIT இளநிலை பொறியியல் மாணவர்கள் 4 ஆண்டுகள் VIT-ல் படித்து, கூடுதலாக 1 ஆண்டு Columbia Engineering-ல் முதுநிலைப் படிப்பை தொடரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

Data Science, Electrical Engineering, Computer Engineering, Quantum Science and Technology, Management Science and Engineering மற்றும் Mechanical Engineering உள்ளிட்ட துறைகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

மாணவர்களுக்கு சர்வதேச வாய்ப்பு

இந்த கூட்டாண்மை மூலம் பொறியியல் மாணவர்களுக்கு சர்வதேச கல்வி அனுபவம், உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

Columbia Engineering உடனான இந்த 4+1 இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தம், VIT மாணவர்களுக்கு சர்வதேச அளவில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!