
அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்துள்ள ஹேமா – வைரலாகும் பதிவு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு தற்போதுதான் மார்பகத்தில் உள்ள கட்டி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஹேமா இணையும்படியான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலை பக்கங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அதாவது ஹேமாவிற்கு கடந்த சில நாட்களாகவே வலதுபக்கம் மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி இருந்திருக்கிறது. உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனையில் சென்று பரிசோதித்து பார்த்தபோது நான்கு சென்டிமீட்டர் அளவுக்கு அந்த மார்பக கட்டி வளர்ந்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை நீக்கிவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருணுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் – ரசிகர்கள் வாழ்த்து!
பின்பு குடும்பத்தினருடன் ஆலோசித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் மார்பக அறுவை சிகிச்சை செய்து அந்த 4 சென்டி மீட்டர் அளவுள்ள மார்பக கட்டியை நீக்கியிருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நான் நலமாக இருக்கிறேன் என சமூக வலைப்பக்கங்களில் தனது ரசிகர்களுக்கு கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விரைவில் குணமாகி மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இத்துடன் ஹேமா தனது ரசிகர்களிடம் பெண்கள் யாரும் மார்பகப் புற்றுநோயை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
Exams Daily Mobile App Download
நாளடைவில் இந்த கட்டி உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நீக்கி விட்டால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் படி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் ஹேமா தற்போது தனது ரசிகர்களிடம் நான் உடல்நிலை தேறி வரவேண்டுமென வேண்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்துள்ளேன். உங்களது ஆதரவினால் மட்டுமே இது சாத்தியம் என ஒரு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.