TNPSC Tamil Ilakkanam Versollil Irunthu Vinaimutru Arithal Study Materials – Free PDF Download

1
TNPSC Tamil Ilakkanam Versollil Irunthu Vinaimutru Arithal Study Materials - Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Versollil Irunthu Vinaimutru Arithal Study Materials - Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Versollil Irunthu Vinaimutru Arithal Study Materials – Free PDF Download

 

TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்:   

 

  • வினைமுற்று” அல்லது “முற்று வினை” என்பது ஒரு செயலை முழுமையாகக் குறிக்கும் வினைச்சொல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பாடுகிறான், எழுதினான், ஆடினான் ஆகிய சொற்களில் வினையானது முழுமை பெற்றுள்ளது. 
  • வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
  • பொதுவாக, வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று:

  • ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம் , செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை, ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • எடுத்துக்காட்டாக, மாணவி கட்டுரை எழுதினாள்.

செய்பவர் –  மாணவி 

காலம் –  இறந்தகாலம் 

கருவி –  தாலும் எழுதுகோலும் 

செய்பொருள் –  கட்டுரை 

நிலம் –  பள்ளி 

செயல் –  எழுதுதல் 

 

குறிப்பு வினைமுற்று:

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்டையாகக் காட்டாது, செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, “குறிப்பு வினைமுற்று” எனப்படும்.

  • பொருள் – அவன் பொன்னன் – பொன்னை உடையவன்       
  • சினை – அவன் கண்ணன் – கண்களை உடையவன் 
  • இடம் – அவன் தென்னாட்டவர் – தென்னாட்டில் வாழ்பவன் 
  • பண்பு – அவன் கரியன் – கருமை நிறத்தவன் 
  • காலம் – சித்திரையன் – சித்திரையில் பிறந்தவன்     
  • தொழில் – அவன் எழுத்தன் – எழுதுபவன் 

 

வேர்ச்சொல்:

  • ஒரு சொல்லின் அடிப்படையான, பிரிக்க முடியாத பகுதிதான் “வேர்ச்சொல்” என அழைக்கப்படுகிறது.
  • மேலும், வேர்ச்சொல் இல்லாமல் ஒரு சொல்லை உருவாக்க முடியாது. 
  • எடுத்துக்காட்டாக, வளையல் என்னும் சொல்லானது வளைய, வளை என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு உருவானது.

வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்றை அறிதல்: 

 

வேர்ச்சொல்  வினைமுற்று 
அடி அடித்தார்
பார் பார்த்தான்
தா தருவார்
மலர் மலர்ந்தது
செய் செய்தான்
கத்து கத்தினான்
எழு எழுந்தார்
தடு தடுத்தான்
வா வந்தான்
விடு விடுவித்தான்
வேய் வேய்ந்தான்
வை வைத்தான்
வரை வரைந்தான்
படி படித்தாள்
கூடி கூடினார்கள்
கல கலந்தார்
கொடு கொடுத்தான்
கல் கற்றான்
தொடு தொட்டது
வீழ் வீழ்ந்தான்
தா தந்தார்
காண் கண்டான்
உடை உடைத்தார்
ஓடு ஓடியது
எழுது எழுதினார்
உழு உழுதார்
அஞ்சு அஞ்சினான்
பூண் பூண்டார்
நறுக்கு நறுக்கியது
பேசு பேசினார்
வில் விற்றான்
நோக்கு நோக்கினான்
இயம்பு இயம்பியது
கொடு கொடுத்தான்
படு படுத்தார்
நடி நடித்தது
பெறு பெற்றான்
உண் உண்டான்
செல் சென்றார்
வீழ் வீழ்ந்தான்
காண் கண்டான்
தேர் தேர்ந்தார்
தின் தின்றது
குடி குடித்தான்
அறு அறுத்தான்
பறி பறித்தான்
ஓடு ஓடியது
வெட்டு வெட்டினான்
அரி அரிந்தார்
கொய் கொய்தது
பிள பிளந்தான்
பாய்ச்சு பாய்ச்சினார்
குத்து குத்தினார்
எய் எய்தான்
வரை வரைந்தான்
கிழி கிழித்தது
தா தருவான்
பற பறந்தது
எழுது எழுதினார்
இயற்று இயற்றுனர்
அடி அடித்தார்
பூசு பூசினார்
எடு எடுத்தவன்
கொடு கொடுத்தான், கொடுத்தாள்
நில் நின்றவன்
இகழ் இகழ்வார்
செல் சென்றவன்
வை வைத்தல்
காண் கண்டாள், கண்டான்
வா வருகின்றனன்
உழு உழுதார்
படி படித்தவன்
சுடு சுடுதல்
கல் கற்றவன்
மகிழ் மகிழ்ந்தவன்
கட்டு கட்டுவான், கட்டினாள்
உறங்கு உறங்கினான்
ஓடு ஓடினான், ஓடினாள்
சிரி சிரித்தவள்
அழு அழுதவன்
தா தருகிறான்
தேர்ந்த தேர்ந்தார்
பாய்ச்சு பாய்ச்சினார்
பிள பிளந்தான்
கூறு கூறினான்

Download PDF here

 Join the ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!