விஜய்யின் தவெக கொடிக்கு மீண்டும் சிக்கல்.. தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன??
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நிறைவில் அக்கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்?? வெளியான முக்கிய தகவல்!!
அதில், ‘நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’. ‘சட்ட ரீதியாக இதனைச் சந்திப்போம்’. ‘தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் கூற முடியாது’. ‘இது சம்பந்தமாக மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.


























