பறிபோகும் முத்துவின் வேலை.. மீனாவிற்கு வரும் பிரச்சனை – “சிறகடிக்க ஆசை” இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், முத்து வேலை இல்லாமல் இருக்க, மீனாவை விஜயா அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் முத்து படும் கஷ்டம் எல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவால் கடனை திரும்ப செலுத்த முடியாததால், அவருடைய கார் இல்லாமல் போகிறது. எனவே முத்துவிற்கு வேலை இல்லை. வீட்டில் முத்து ஒரு ஆள் தான் சம்பாரித்து கொண்டிருந்த நிலையில், வேலை இல்லாமல் போனதால் கஷ்டம் அதிகமாக வருகிறது. விஜயா வீட்டில் மீனாவிற்கு பல கஷ்டங்களை கொடுக்கிறார். ரோகிணி மற்றும் மனோஜ் தான் இந்த வீட்டில் சம்பாரிப்பவர் அவர்களின் காசில் நீ வாழ்கிறாய் என பேசுகிறார்.
மாநில அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி உயர்வு அமல்!!
இந்நிலையில் எப்படியாவது காசு கொடுத்து முத்து காரை மீட்க வேண்டும் என மீனா கிளம்பி செல்கிறார். ஆனால் அடகுக்கடை இல்லாததால் அவரால் பணம் கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில் முத்துவிடம் கார் துடைக்கும் வேலை ஒன்றை ஒருவர் சொல்ல, முத்துவும் அதை செய்ய தயாராக இருக்கிறார். அப்போது முத்து காரை ஓட்டி பார்க்க சொல்ல, அவர்கள் நிராகரிக்கின்றனர். அதனால் முத்து வருத்தப்பட, மீனா அதை பார்த்து கவலைப்படுகிறார். இதெல்லாம் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.