விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் நல்ல ஒரு குடும்ப சீரியலாக இருப்பதால் பலர் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் கதையுடன் இணைந்து நடித்து வருகின்றனர். ஒற்றுமையாக மட்டுமே பல எபிசோடுகளை கடந்து சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது வரும் எபிசோடுகளில் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தம்பி கதிர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அவருடைய வீட்டில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று இருக்கிறது. அதாவது அவருடைய தங்கை சூர்யாவிற்கு திருமணம் நடந்துள்ளது. அதில் ஏகப்பட்ட சொந்தங்களும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தனம் கதிர் முல்லை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோபியை திருமணம் செய்ய போவதாக சொன்ன ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகாவும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!