நடிகை விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை பொய்யா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

0
நடிகை விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை பொய்யா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
நடிகை விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை பொய்யா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
நடிகை விஜே சித்ராவின் பிரேத பரிசோதனை பொய்யா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

நடிகை சித்ரா மரணத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் பரபரப்பு புகார் அளித்த நிலையில், அவர் கூறுவது பொய் எனவும் சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என அவரது தாயார் கூறியுள்ளார். அடுத்தடுத்து வெளிவரும் குழப்பமான தகவல்களால் விஜே சித்ராவின் தற்கொலை விவகாரம் மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

அதிர்ச்சி தகவல்கள்:

பிரபல சீரியல் நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்சனை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால் ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

சித்ராவின் செல்போனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் ஹேம்நாத்தை கைதும் செய்தனர். தற்போது ஹேம்நாத் ஜாமினில் வெளியே வந்துள்ளார். சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில ஹேம்நாத் தற்போது சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறி வருகிறார். இந்நிலையில் தனது மகள் சைக்காலஜி படித்தவள் என்றும், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவள் கோழையல்ல என்றும் சித்ராவின் தாய் கூறி வருகிறார்.

Exams Daily Mobile App Download

சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது. அதில், சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. முக்கியமாக சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல் அவருடைய நகத்தின் மூலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. இந்த சூழலில் தான் சித்ராவின் தாய் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் சித்ராவின் கழுத்து பகுதியில் பல்லால் கடித்த அடையாளம் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது தாயார் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் சித்ராவின் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்ற வகையிலேயே உள்ளது. சித்ராவின் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை எனவும், சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது என கூறியுள்ளதால், அவரது தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!