கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி “குக் வித் கோமாளி” ரக்‌ஷன் – வைரலாகும் புகைப்படம்!

0
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி "குக் வித் கோமாளி" ரக்‌ஷன் - வைரலாகும் புகைப்படம்!
கதாநாயகனாக களமிறங்கும் விஜய் டிவி “குக் வித் கோமாளி” ரக்‌ஷன் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அங்கராக கலக்கி வரும் ரக்‌ஷன் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அவருடைய பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விஜே ரக்‌ஷன்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் திறமையானவர்களுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும். அந்த வகையில் கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரக்‌ஷன். தற்போது நம்பர் ஒன் நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ரக்‌ஷனும் ஒரு காரணம் என சொல்லும் அளவிற்கு தன்னுடைய அங்கரிங் திறமையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ரக்‌ஷன் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலமாக அவரின் நடிப்பு திறமைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ரக்‌ஷன் புது படத்தில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான சீரியல் நடிகை ஸ்ரீநிதி – ரசிகர்கள் கொந்தளிப்பு!

அவருக்கு ஜோடியாக விஷாகா திமன் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் தீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படத்தின் தொடக்க பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது ரக்‌ஷன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!