8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

3
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும்
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் "பாரதி கண்ணம்மா சீசன் 2" - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் இந்த சீரியல் முடியப் போகிறது என வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் சீசன் 2, 8 வருடங்களுக்கு பின்னர் தொடர்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. நகரம் முதல் கிராமம் வரை இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 சீரியலான பாரதி கண்ணமம்வில், தனது மனைவியை சந்தேகப்பட்டு பாரதி பிரிந்து விடுகிறார். இருவரையும் சேர விடாமல் வில்லி வெண்பா தடுக்கிறார். மேலும் கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை அப்பாவிடமும், மற்றொரு குழந்தை அம்மாவுடனும் வளர்ந்து வருகின்றனர். பாரதி ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் கதை முடிந்துவிடும்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் செய்த புதிய சாதனை – 600 எபிசோடுகள்! ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் பாரதியை டெஸ்ட் எடுக்க விடாமல் வெண்பா தடுத்து வருகிறார். இந்நிலையில் 8 வருடங்களுக்கு பின் தற்போது குழந்தைகள் பெரியவர்களாக மாறி கதை நகர்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் இந்த சீரியலில் இதுவரை தெரியாமல் இருந்த உண்மைகள் அனைத்தும் வெளியாகி வருவதால் தான், 8 வருடங்களுக்கு பின் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரிந்துள்ளது. அதே போல வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என தெரிந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு பதில் புது நடிகர் அறிமுகம் – ‘ரோஜா’ சீரியலில் நியூ என்ட்ரி!

இவ்வாறு தொடர்ச்சியாக ட்விஸ்டுகள் வெளியாகி வருவதால் இந்த சீரியல் முடிய இருப்பதாக பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறது என அறிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த சீரியல் முடிய வாய்ப்பில்லை என தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. அதிர்ச்சியோ வருத்தமோ அடைய தேவையில்லை. ஒரு இதய நோய் மருத்துவர் தன் உடலில் குறை இருப்பதை இயல்பாக உணரவில்லையாம். சரி : அது குறித்த ஆய்வக அறிக்கையை ஓரு தடவைக்கு மறு தடவை சரியென்று பார்க்கமாட்டாராம். இவருக்கு குறை என்று சொல்லிய தோழி வருடகணக்கில் உடன் வாழ எப்படி காத்திருப்பார் என்று கூட ம்ருத்துவர் நினைக்க தோன்றவில்லையாம் மொத்தத்தில் லாஜிக் இல்லாத ரசிகர்கள் சிந்தனை திறன் இல்லாதவர்கள் என்ற விதத்தில் ஓடிய தொடர். இனியும் தொடர்ந்து பார்க்க பொறுமை இல்லை Good bye

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!