Vijay Hazare Trophy – தமிழக வீரர் ஜெகதீசன் அசத்தல் சதம்! கர்நாடகா அணிக்கு 355 ரன்கள் இலக்கு!

0
Vijay Hazare Trophy - தமிழக வீரர் ஜெகதீசன் அசத்தல் சதம்! கர்நாடகா அணிக்கு 355 ரன்கள் இலக்கு!
Vijay Hazare Trophy - தமிழக வீரர் ஜெகதீசன் அசத்தல் சதம்! கர்நாடகா அணிக்கு 355 ரன்கள் இலக்கு!
Vijay Hazare Trophy – தமிழக வீரர் ஜெகதீசன் அசத்தல் சதம்! கர்நாடகா அணிக்கு 355 ரன்கள் இலக்கு!

விஜய் ஹசாரே ட்ராபியின் தமிழ்நாடு vs கர்நாடகா 2வது காலிறுதி போட்டி இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி கர்நாடக பந்துவீச்சை எதிர்கொண்டு 354 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் தமிழ்நாடு வீரர் ஜெகதீஷன் சதம் அடித்து அசத்தினார்.

காலிறுதி போட்டி:

2021-2022 ஆம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே கிரிக்கெட் ட்ராபி தொடர் நடைபெற்று கொண்டு வருகிறது. இன்று காலிறுதியில் KL சைனி மைதானத்தில் மோதும் தமிழ்நாடு vs கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்று கர்நாடக அணி முதலில் பௌலிங் செய்தது. கர்நாடக அணியின் பௌலிங்கை தமிழ்நாடு அணி துவம்சம் செய்து 354 ரன்கள் குவித்தனர். இதில் சிறப்பாக விளையாடிய ஜெகதீஷன் 101 பந்துகளில் சதம் அடித்தார்.

புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

டாப் ஆர்டரில் வாய்ப்பளிக்கப்பட்ட சாய் கிஷோர் அரைசதம் அடித்து வாய்ப்பை தக்க வைத்தார். மிடில் ஆர்டரில் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக், இந்திரஜித் சிறப்பாக விளையாடினர். பினிஷெர் ரோலில் அசத்தும் ஷாருக்கான் 39 பந்துகளில் 79 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை முடித்தார். கர்நாடக பௌலர்கள் பிரவீன் துபே 3 விக்கெட்களையும் ப்ரதிஷ் கிருஷ்ணா 2 விக்கெட்களையும், காரியப்பா மற்றும் விஜயகுமார் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ஒரே பெயரின் கீழ் பல இணைப்புகள் இருந்தால் நடவடிக்கை!

பின்பு களம் இறங்கிய கர்நாடக அணி தொடகத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீரரான படிக்கல் ரன்கள் எதுவும் அடிக்காமல் வாரியர் பந்தியில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. பிரவீன் துபேவும், ஸ்ரீனிவாஸ் சரத்தும் களத்தில் உள்ளனர். 24 ஓவரில் 5 விக்கெட் பறிபோய் உள்ளதால் கர்நாடக அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!