SBI வங்கியில் லாகின் செய்யாமல் கணக்கு விவரங்கள் சரிபார்ப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி வாடிக்கையாளர்கள் தனது கணக்கை லாகின் செய்யாமலேயே பேலன்ஸ் உட்பட கணக்கு தொடர்பான சில விவரங்களை யோனா சேவை மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
யோனா சேவைகள்
நாடு முழுவதும் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஒரு முன்னணி வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் முதிய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்கியும் வருகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் கணக்கை பாதுகாக்கும் வகையில் மோசடி தொடர்பான எச்சரிக்கைகளையும் அடிக்கடி கொடுத்து வருகிறது.
TNPSC உதவி புவியியலாளர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!
இந்நிலையில் SBI வங்கியின் இணைய வங்கி சேவையான யோனா செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கை லாகின் செய்யாமல், பேலன்ஸ் உள்ளிட்ட கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் இந்த சேவைகள் மூலம் பயனர்கள், pre-login features செயல்பாடுகளை உபயோகித்து பரிவர்த்தனை விவரம், வங்கி கணக்கு புத்தகம் தொடர்புடைய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் குயிக் பே சேவையின் மூலம் 6 இலக்க எம்பியை கொண்டு ரூ.2 ஆயிரம் வரை பணப்பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
TN Job “FB
Group” Join Now
அதே போல ATM பின் உருவாக்க சேவைகளையும், இனி SBI வாடிக்கையாளர்கள் வீடுகளில் இருந்தபடியே உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்காக SBI வங்கியின் IVR அழைப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டும். இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். பின்னர் ATM மற்றும் டெபிட் கார்டுகள் சேவைகளுக்காக எண் 2 ஐ அழுத்த வேண்டும். இதனுடன் தொடரும் கேள்விகளுக்கு எண் வழியாக பதில் செய்வதன் மூலம் ATM பின்னை உருவாக்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.