வனிதா கழுத்தில் தாலி கட்டிய பவர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!

0
வனிதா கழுத்தில் தாலி கட்டிய பவர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படம்!
வனிதா கழுத்தில் தாலி கட்டிய பவர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படம்!
வனிதா கழுத்தில் தாலி கட்டிய பவர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த வனிதா விஜயகுமார் கழுத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தாலி கட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி தீயாய் பரவி உள்ளது.

வனிதா விஜயகுமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான், நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தேவி தம்பதியரின் மூத்த மகள். இவர் நடிகர் விஜயுடன் “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பின்பாக அவ்வளவாக திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காததால், நடிக்காமல் இருந்தார். பின், தனது திருமண வாழ்க்கையை கவனிக்க சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகையின் மாத சம்பளம் – ரசிகரின் கேள்விக்கு நடிகை ஹேமா பதில்!

இவர் கடந்த “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் வெறுப்பினையும் சம்பாரித்தார். சக போட்டியாளர்களிடம் சண்டையிடுவது மட்டுமே தனது முழு நேர வேலையாக வைத்திருந்தார். இப்படியாக இருக்க, கடந்த ஆண்டு இவர் தன்னுடன் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான வேகத்திலேயே அவரை விட்டு பிரிந்து விட்டார். இதனால் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றி பலரும் விமர்சனம் மற்றும் கேலி செய்து வந்தனர். பின், இதனை பொருட்படுத்தாத வனிதா தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தனது வழக்கமாக கொண்டிருந்தார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இவரும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் திருமண கோலத்தில் இருந்த புகைப்படம் ஒன்று தீயாய் பரவியது. இதனை பார்த்து விட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புகைப்படத்தில் இருவரும் மாலை மாற்றுவது போல இருந்தது. தற்போது அதே திருமண கோலத்தில் நடிகர் பவர் ஸ்டார் வனிதா கழுத்தில் தாலி கட்டுவது போல உள்ள ஒரு புகைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!