சட்டத்துக்கு முரணானது’ – 75 நாடுகளுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் விசா தடை ரத்து!
அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயல்முறையை நிறுத்திய ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜீனெட் வர்காஸ், இந்த நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என்றும், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் சட்டப்பூர்வ அதிகார வரம்பை மீறியதாகவும் தீர்ப்பளித்தார்.
இந்தக் கொள்கை ஜனவரி 2026 முதல் அமலில் இருந்து, 75 நாடுகளைச் சேர்ந்த குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களை பாதித்தது. குடியுரிமை அல்லது நாட்டின் அடிப்படையில் ஒரே மாதிரியான தடையை விதிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாக பரிசீலிக்க வேண்டும் என்பதே அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் அடிப்படை நடைமுறை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த தீர்ப்பால், 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கு குறிப்பாக immigrant visa processing freeze தொடர்பானது; அமெரிக்காவின் பிற பயண அல்லது விசா கட்டுப்பாடுகளிலிருந்து இது தனித்த கொள்கையாகும்.



























