UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் IAS, IPS, IRS மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 979 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வானது முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கு ஜனவரி 22ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
AIIMS-ல் Project Technical Support-II காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விரையுங்கள்!!
முதலில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 11 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அதை 18 ஆக UPSC நீட்டித்து வழங்கியது. இந்நிலையில், தற்போது UPSC-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .மேலும், பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும், முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























