இனி, நெட் கனெக்சன் இல்லாமல் UPI யூஸ் பண்ணலாம்..!! ” அது எப்படினு தெரிஞ்சிக்கணுமா”..??
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கூகுள் பே, போன்பே, நெட் பேங்கிங் மற்றும் UPI போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. மேலும், இணைய வசதி இருந்தால் மட்டுமே இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகளை நம்மால் மேற்கொள்ள முடியும். அந்த வகையில், இணைய வசதிகள் இல்லாத பகுதிகளில் UPI வசதி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 2023 ஆண்டு ‘UPI LITE’ என்ற இணைய வசதி இல்லா பண பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த UPI Lite குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக்கும் வகையில், இணைய வசதி இல்லாத ஊர்களில் ‘UPI Lite’ சேவையை அறிமுகப்படுத்தி, இதன் வேலட் லிமிட்டை ரூ. 1000 ஆக RBI நிர்ணயித்தது. மேலும், இது கடந்த மாதங்களுக்கு முன் ரூ.2000 என அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ரூ. 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முறை பணம் செலுத்தும் போது அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




























Not. Data free UPI account transfer