தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு கட்டாயம் இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 100% ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
அதன்படி, 2021-22 கல்வியாண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆன்லைன் மூலமாக அனைத்து பாடங்களையும் கற்பது சிரமமாக உள்ளது. எனவே முக்கியம் இல்லாத பாடங்களை நீக்க வேண்டும் எனவும், ஒவ்வோரு பாடத்திலும் சம்மந்தம் இல்லாத பகுதிகளை நீக்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் சில மணி நேரம் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதன் மூலமாக அனைத்து பாடங்களையும் விரைவாக முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் ஈடுபட அரசு இலவச அன்லிமிடெட் டேட்டா வசதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு செய்தால் கொரோனா பரவலுக்கு பின்னர் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்களுக்கு சிரமமின்றி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.