புதிய வருமான வரிச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!  விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்..!!

0
????? ?????? ????? ???????????? ?????? ????????? ????????...!!  ???????? ???????? ?? ????????? ?????..!!
புதிய வருமான வரிச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!!  விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்..!!

புதிய வருமான வரிச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!  விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்..!!

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை (01-02-2025) அன்று  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.  மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புதிய அம்சங்களுடன் கூடிய வருமான வரி மசோதா பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதாவது, நேற்று (07-02-2025) பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக இந்திய பத்திரிகை அறக்கட்டளை (PTI) தெரிவித்துள்ளது. மேலும், “வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக அமையும் இந்த மசோதா, இந்தியாவின் வரி முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, வரி செலுத்துவோர்  விதிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட மொழி எளிமைப்படுத்தபட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக”  தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!