UGC NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு – 1.47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி
UGC NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. மொத்தம் 84 பாடங்களுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வில் 6.07 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், மொத்தம் 1,47,579 பேர் மூன்று தகுதி பிரிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரிவுகளின் அடிப்படையில் தகுதி
தேர்ச்சி பெற்றவர்களில்:
- JRF மற்றும் Assistant Professor தகுதி பெற்றவர்கள்
4,241 - Assistant Professor மற்றும் PhD Admission தகுதி பெற்றவர்கள்
45,904 - PhD Admission மட்டும் தகுதி பெற்றவர்கள்
97,434
UGC NET தேர்வு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Junior Research Fellowship (JRF), Assistant Professor தகுதி மற்றும் PhD சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்க நடத்தப்படுகிறது.
முடிவை எப்படி பார்ப்பது?
தேர்வர்கள் தங்களது Application Number மற்றும் Password பயன்படுத்தி UGC NET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: English, Commerce மற்றும் Sociology பாடங்களுக்கான தேர்வு மறுதேர்வாக நடைபெறுவதால், அந்தப் பாடங்களின் முடிவுகள் பின்னர் வெளியிடப்படும்.



























