கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறப்பு விருது.. UEFA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
கால்பந்து விளையாட்டில் தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர் யார் என்றால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். அவரின் அதிரடியான செயல்களும், களத்தில் இவர் கோல் அடிக்கும் விதமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆண் இனம் அழிய போகுதா..? ஏன் தெரியுமா..?
அதாவது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்ததற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஒரு சிறப்பு விருது அளிக்க உள்ளதாக UEFA அறிவித்துள்ளது. UCL வரலாற்றில் ரொனால்டோ 141, மெஸ்ஸி 120, லெவன்டோவ்ஸ்கி 94 கோல்கள் அடித்து முதல் 3 இடங்களில் உள்ளனர். ஐரோப்பிய கால்பந்து லீக்கை விட்டு சவுதி அரேபியா கிளப்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரொனால்டோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

























