கொரோனாவை ஓரங்கட்டிய வலிமை & மாஸ்டர் – ட்விட்டர் டாப் 10 ட்ரெண்டிங்ஸ்!

0
கொரோனாவை ஓரங்கட்டிய வலிமை & மாஸ்டர் - ட்விட்டர் டாப் 10 ட்ரெண்டிங்ஸ்!
கொரோனாவை ஓரங்கட்டிய வலிமை & மாஸ்டர் - ட்விட்டர் டாப் 10 ட்ரெண்டிங்ஸ்!
கொரோனாவை ஓரங்கட்டிய வலிமை & மாஸ்டர் – ட்விட்டர் டாப் 10 ட்ரெண்டிங்ஸ்!

ட்விட்டர் நிறுவனம் சார்பில் 2021 ஆம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவிக் அதிகம் ட்ரெண்டான 10 ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஜித் நடிக்கும் வலிமை, விஜயின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

டாப் 10 ஹேஷ்டேக்குகள்:

உலகளவில் பல நாடுகளில் 2021 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்தனர். மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினர். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் சார்பில் 2021 ஆம் ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான 10 ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு? வெளியான தகவல்!

ஹேஷ்டேக் (Hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு. குறிப்பாக இவை ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும். இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட முதல் 10 ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் அஜித் நடித்து வெளியாக உள்ள வலிமை படம் முதலிடத்தையும், விஜயின் மாஸ்டர் படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் நான்காவது இடத்தில் அஜித்குமார் என்ற ஹேஷ்டேக்கும் ஐந்தாவது இடத்தில் ‘தளபதி 65’ என்ற ஹேஷ்டேக்கும் இருக்கிறது. உலகமெங்கும் கோடான கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ‘பிடிஎஸ்’ எட்டாவது இடத்திலும், உலக மக்களை ஆட்டிப்படைத்த ‘கொரோனா’ 9வது இடத்திலும் உள்ளது. தெலுங்கு திரையுலகம் சம்பந்தப்பட்ட சர்க்காரு வாரி பாட்டா மூன்றாவது இடத்திலும், வக்கீல் சாப் 10 வது இடத்திலும் உள்ளது. இதன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களை விட தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதிக்கம் ட்விட்டரில் அதிகமாக உள்ளது என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!