“வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்”.. த.வெ.க தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்!!
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்நிலையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது. அதன்படி தவெக மாநாடு தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஜோசியம் பலிக்கும், 2026ல் அதிமுக ஆட்சிக்கு வரும்.. எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்து!!
அதில், ‘தவெக முதல் மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது’. ‘உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்’.’நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்’. ‘வரும் 2026 என்ற இலக்கை நோக்கி, வி.சாலை என்னும் வியூகச் சாலையில் முதல் அடியை எடுத்து வைப்போம்’ என்றும் தெரிவித்துள்ளார்.


























