
இந்தியர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்கா அரசு..!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!! ஏன் தெரியுமா..?
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த அதிரடி நடவடிக்கைகளில் சிலவற்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்தாலும் விரைவில் இவை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மசோதா மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் இதன் மூலம் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “அமெரிக்க விசா விதிப்படி, அமெரிக்காவை சாராத நபர்கள் 21 வயதான பிறகு 2 வருடங்களுக்குள் விசா பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்நிலையில், H-1B விசா வைத்துள்ள பெற்றோருடன், சிறு வயதில் இடம்பெயர்ந்து அமெரிக்காவிற்கு சென்ற குழந்தைகளின் விசா 21 வயதானதும், காலாவதி ஆகிவிடும் என்பதால், தற்போது அமெரிக்காவில் இருந்து பெற்றோரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 1 லட்சம் இந்திய இளைஞர்கள் உள்ளதாக கூறப்படுகிறது”.

























