‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ வரை – ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'பாரதி கண்ணம்மா' முதல் 'ரோஜா' வரை - ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!
'பாரதி கண்ணம்மா' முதல் 'ரோஜா' வரை - ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ வரை – ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!

தமிழில் ஒளிபரப்பாகும் சில முன்னணி சீரியல்களின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.

சீரியல் ப்ரோமோ

பொதுவாக ஒரு நாளைக்கு தமிழ் மொழியில் மட்டும் நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பப்படுவது உண்டு. ஆனால் இந்த நூற்றுக்கணக்கான சீரியல்களில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ள சீரியல்கள் மட்டுமே TRP ரேட்டிங்கில் முதல் சில இடங்களை பிடித்து வருகிறது. குறிப்பாக முன்னணி இடத்தை பிடிக்கும் சீரியல்கள் அனைத்தும் பெரும்பாலும் விஜய்,சன், ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளை சார்ந்ததாகவே இருக்கும்.

விஜய் டிவி ‘Bigg Boss Season 5’ Promo 2 ரிலீஸ் – மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்படும் சீரியல் எபிசோடுகளுக்கு சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகும். அந்த வகையில் முன்னணி இடத்தை பிடித்துள்ள சில சீரியல்களையும் அதற்கான டாப் கமெண்ட்ஸ்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோடுக்கு, கூட்டுக்குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து முல்லையின் கவலையை நீக்க கதிர் என்ன செய்ய போகிறார், கஸ்தூரி பேச்சை கேட்டு கண்ணன் தான் இந்த குடும்பத்தை ஆட்டி வைக்க போறான் அது கூடிய சீக்கிரம் நடக்கும் என சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அடுத்ததாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரோமோவுக்கு இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தவளை தன்வாயால் கெடும் என்பது போல வெண்பா அதுவா வந்து சிக்குது என்று ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அஞ்சலி நல்லா படிச்ச பொண்ணு அவங்கள ஏன் முட்டாளா காமிக்கிறீங்க, மாத்திரையை எழுதி கொடுத்தவனே உங்கள் வீட்ல தான் இருக்கான் அவன் கிட்டயே கேட்டுக்களாமே, இந்த வெண்பா விக்கெட் மட்டும் விழவே மாட்டேங்குதே என்று சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு இவங்களுக்கு எப்போதும் இதே வேலைதானா, சீரியல் வில்லி அர்ச்சனாவுக்கு சாதகமா போகுது, எல்லா சீரியலிலும் நல்லவர் செய்யும் நல்லது யாருக்கும் தெரியல, எப்போதும் சிவகாமி ஒரு அரைகுறை தான் என விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

விஜய் டிவி ‘Bigg Boss Season 5’ Promo 2 ரிலீஸ் – மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தொடர்ந்து ‘ரோஜா’ சீரியலின் ப்ரோமோவுக்கு இந்த கதையை பார்க்கவும் முடியலை பார்க்காம இருக்கவும் முடியல, அனு அடுத்து என்ன பண்ண போறாளோ, அர்ஜுன் ப்ளான் ஒர்க் ஆகுது, அர்ஜுனும் ரோஜாவும் செண்பகத்தை காப்பாத்துனா நல்லா இருக்கும், அன்னபூரணி எப்போதான் திருந்த போகுதோ தெரியல என கமெண்ட் செய்துள்ளனர். இந்த மொத்த கமெண்டுகளை வைத்து பார்க்கும் போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!