நாளைய வானிலை அறிக்கை.. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் உள்ளே!!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 3) முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, அடுத்து வரும் 3 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.



























