நாளைய வானிலை அறிக்கை.. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. முக்கிய எச்சரிக்கை!!
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று (நவம்பர் 23) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை (நவம்பர் 25) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.



























