நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. விவரம் உள்ளே!!
வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.. வங்கி கடனில் சலுகை.. அறிவிப்பு வெளியீடு!!
இந்த கனமழை வரும் அக்டோபர் 26ம் தேதி வரையிலும் நீட்டிக்கலாம் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


























