இனி, தனியார் வாகனங்கள் சுங்க வரி செலுத்த தேவையில்லை…!! இந்த ஒன்றை மட்டும் பொருத்தினால் போதும்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு”..!

1
???, ??????? ????????? ????? ??? ??????? ??????????...!! ???? ????? ??????? ???????????? ??????.. ?????? ???????? ?????????"..!
இனி, தனியார் வாகனங்கள் சுங்க வரி செலுத்த தேவையில்லை...!! இந்த ஒன்றை மட்டும் பொருத்தினால் போதும்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு"..!

இனி, தனியார் வாகனங்கள் சுங்க வரி செலுத்த தேவையில்லை…!! இந்த ஒன்றை மட்டும் பொருத்தினால் போதும்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு”..!

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விரிவாக செல்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு 60 கிலோமீட்டர் தொலைவிலும் சுங்க சாவடி அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், இனி குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ சுற்றளவுக்குள் செல்லும் தனியார் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதாவது, குளோபல் நாவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) பொருத்தப்பட்டு 20 கி.மீ சுற்றளவில் செல்லும்  தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். இந்த GNSS என்பது வாகனங்களின் துல்லியமான இருப்பிட கண்காணிப்பை செயல்படுத்தும் ஒரு கருவியாகும். இது சுங்கச்சாவடியின் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்கப்படுவதை விட 1 கிலோமீட்டர் என்ற அடிப்படையில் செயற்கைகோள் மூலம் தானாகவே வாகன ஓட்டிகளிடம் இருந்து  கட்டணம் வசூலிக்கிறது. மேலும், இந்த புதிய விதி குறிப்பிட்ட சில நெடுஞ்சாலைகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது சுங்கச்சாவடியில் உள்ள வாகன நெரிசலை குறைக்கவும், சுங்கச்சாவடி கட்டண வசூலை ஒழுங்குமுறை படுத்தவும்  மற்றும் பயணிகளின் நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

1 COMMENT

  1. இவர்கள் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு நன்மை தரும் திட்டமாக இருக்காது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!