
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு…உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்த அதிரடி கருத்து
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும், இந்த தர்காவில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து வருவதை எதிர்த்து இந்து அமைப்பினர் சமீபத்தில் போராட்டங்களை நடத்தினர். இதனால், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, 144 தடை உத்தரவை பிறப்பித்து இருந்தார்.
மேலும், இந்த சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடுவதை தடை விதிக்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைக்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து அமைப்பினர் சார்பில் 5 வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில், இன்று இதுகுறித்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில், “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்”. “மனிதர்கள் தான் சரியாக இல்லை” என்றும், “திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது”. இதனால், “தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

























