
Today Vegetable Price: சென்னை கோயம்பேட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை..!! ” பீன்ஸ், உருளைக்கிழங்கு கிலோ எவ்வளவு தெரியுமா”…?
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக வெங்காயம், பீன்ஸ் மற்றும் பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பெரிதளவில் பாதித்துள்ளன. மேலும், சென்னையில் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று(டிசம்பர் 17) விலை அதிரடியாக சரிந்தது. இதனை தொடர்ந்து, இன்றைய நாளுக்கான விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 27 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 65 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 65 ரூபாய், பீட்ரூட் 46 ரூபாய், உருளைக்கிழங்கு 45 ரூபாய், அவரைக்காய் 43 ரூபாய், முட்டைக்கோஸ் 34 ரூபாய், கேரட் 45 ரூபாய், முருங்கைக்காய் 110 ரூபாய், கத்தரிக்காய் 39 ரூபாய், பீன்ஸ் 62 ரூபாய், பூண்டு 338 மற்றும் இஞ்சி 67 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
























